கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

இங்கிலாந்தில் இருக்கிற ஒரு கிராமம்.

அங்கிருந்த விவசாயி ஒருவரிடம்
குதிரையொன்று இருந்தது.

'பட்டீ' (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர்.

அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான்.

ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி.

அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார்.

வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய

கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின.

வந்தவர், வணக்கம் சொன்னார்.

விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.

அவர் உட்கார்ந்ததும், 'சூடாக டீ குடிக்கிறீங்களா?' என்று கேட்டார்.

வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார்.

'சொல்லுங்க, என்ன விஷயம்?' விவசாயி கேட்டார்.

'ஒண்ணுமில்லை. நான் லண்டன்லருந்து வர்றேன்.

இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.

வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு.

அதை வெளியே எடுக்கணும்.

உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க.

அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க.

அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று...

'ரொம்பப் பெரிய காரா?' என்று கேட்டார் விவசாயி.

'இல்லை, இல்லை. சின்ன கார்தான்' என்றார் வந்தவர்.

விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார்.

குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார்.

விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை

எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.

கார் சிறியதாகத்தான் இருந்தது.

ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய

குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.

விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி,

குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார்.

கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

பிறகு, 'எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்!' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.

குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.

'பெய்லி (Bailey) இழுடா ராஜா!' இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி.

குதிரை நகரவேயில்லை.

'டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!' மறுபடியும் உரத்த குரலில் சொன்னார்.

குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

'என் செல்லம் பட்டீ நீயும் சேர்ந்து இழுடா!' என்றார்.

அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார்.

ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க?

அதுதான் எனக்குப் புரியலை.’

'என் பட்டீக்கு கண்ணு தெரியாது.

தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு

அது நினைச்சுடக் கூடாது இல்லியா?

அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன்.

அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு.

காரை வெளியே இழுத்துடுச்சு!'

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை.

ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’.

இதை பிரெஞ்ச் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான

பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

வார்த்தைகளின் மகிமை அபாரமானது.

அதனால்தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது,

கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார் வள்ளுவர்.

வெற்றிக்கு தன்னையும், தோல்விக்கு பிறரையும், அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்...


vaastu


இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.

1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.

2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து
 சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா
 ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.

5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்
 தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.

8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.

9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.

11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்

12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.

14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.