மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள்  எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்து கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

அற்றார் அழிபசி தீர்த்தல்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

படித்ததும் பதிந்தேன்.

தத்துவம்

🌸 வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ
வயது குறைவு.

🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ 
வீரம் இல்லை.

🐦கருங்குயிலுக்குத்
தோகையில்லை,
🐤தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.

🍃 காற்றுக்கு
உருவமில்லை
🌞 கதிரவனுக்கு நிழலில்லை
💧 நீருக்கு நிறமில்லை
⚡ நெருப்புக்கு ஈரமில்லை,

🎯ஒன்றைக் கொடுத்து 
🎲ஒன்றை எடுத்தான்,

🏆ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும் 
👤கல்லாய் நின்றான்
இறைவன்.                                                      

எவர் வாழ்விலும் நிறைவில்லை,

எவர் வாழ்விலும் குறைவில்லை,

புரிந்துகொள் மனிதனே 
அமைதி கொள் !!!!

            -படித்ததில் பிடித்தது.

பொய் சொல்லி தப்பிக்காதே,

உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,

-பொய் வாழ விடாது !

-உண்மை சாக விடாது !

                  - விவேகானந்தர்

💓இதயம் சொல்வதை செய் 
வெற்றியோ 
தோல்வியோ 
அதை 
தாங்கும் சக்தி 
அதற்கு மட்டும் தான் உண்டு 

                  -விவேகானந்தர் 

தன்னை அறிந்தவன் 
ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன் 
கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும் 
உணர்ந்தவன் 
துன்ப பட மாட்டான் 

                        -பகவத் கீதை 

யார் என்ன சொன்னாலும் 

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே 

ஒரு சமயம் நீ  மாற்றினால் 

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் 

                                                                          -கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும் 
வெற்றி பெற வேண்டுமானால், 

ஒரு எதிரியாவது தேவை 

                                                               - A.P.J.அப்துல்கலாம் 

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,

தோற்பது எப்படி என்று யோசித்து பார் ,

நீ
ஜெயித்து
விடுவாய் 

                                 -ஹிட்லர் 

அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்

வெற்றி உன்னை தேடி வரும் 

                        -  A.R.ரகுமான் 

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் 

                                                                      - நெப்போலியன் 

கோவம் என்பது 
பிறர் செய்யும்
தவறுக்கு ,

உனக்கு நீயே 
கொடுத்து கொள்ளும் தண்டனை ,

                                    - புத்தர் 

விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள்
உறங்குவது இல்லை!!!

                       - காரல் மாக்ஸ்

வெற்றி இல்லாமல்
வாழ்கை இல்லை,

வெற்றி மட்டுமே
வாழ்கை இல்லை, 

                            - பில்கேட்ஸ் 

வெற்றிகளை சத்தித்தவனின்
இதயம் 

பூவை போல் மென்மையானது 

தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின்
இதயம்

இரும்பை விட வலிமையானது 

                                                                     - விவேகானந்தர் 

நீ பட்ட துன்பத்தை விட 

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது 

                                                                      - விவேகானந்தர் 

தோல்விக்கு இரண்டு காரணம் 

ஓன்று 

யோசிக்காமல் செய்வது 

இரண்டு 

யோசித்த பின்னும் 
செய்யாமல் இருப்பது 

                                                                       - ஸ்ரீ கிருஷ்ணர் 

பெண்கள் இல்லை என்றால் 

ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை 

பெண்களே இல்லை என்றால் 

ஆறுதலே தேவை இல்லை 

                -சார்லி சாப்பிளின்